சோலையார் அணை நீர்மட்டம் 140 அடியாக உயர்வு


சோலையார் அணை நீர்மட்டம் 140 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 18 July 2021 11:31 PM IST (Updated: 18 July 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோலையார் அணை நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்து உள்ளது.

வால்பாறை

வால்பாறையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக  சோலையார் அணை நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்து உள்ளது. 

சோலையார் அணை 

மலைப்பிரதேசமான வால்பாறையில் கடந்த மாதம் 3-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து அங்கு அவ்வப்போது மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக  அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக பி.ஏ.பி. (பரம்பிக்குளம்-ஆழியாறு) திட்டத்தின் முக்கிய அணையாக இருக்கும் சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் 160 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. 

140 அடியாக உயர்வு 

தற்போது இந்த அணைக்கு வினாடிக்கு 2,038 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 866 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை விட, வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து வால்பாறை பகுதியில் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் இந்த அணை விரைவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மழையளவு 

மேலும் வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் இங்குள்ள நீரோடைகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  

வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டர்) விவரம் வருமாறு:- 

மேல்நீரார் 79 மி.மீ., கீழ்நீரார் 55, சோலையார் அணை 21, வால்பாறை 19 மி.மீட்டர் ஆகும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்துத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story