இது கழிவுநீர் ஓடை அல்ல...வீணாகும் குடிநீர்
இளையான்குடி நகரில் குழாய் உடைந்து காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகின்றது.
இளையான்குடி,
படத்தை பார்த்ததும் ஏதோ கழிவுநீர் ஓடை செல்கிறது என்று நினைத்து விடாதீர்கள். வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர் தான் இப்படி செல்கிறது.இளையான்குடி கண்மாய்க்கரை அருகே உள்ள மேலப்பள்ளிவாசல் எதிரில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக குடிநீர் ஓடை போல ஓடி வீணாகுகிறது.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த வேதனையுடன் கடந்து சென்றார்கள். இளையான்குடி பகுதியில் குடிப்பதற்கே தண்ணீர் சரிவர கிடைப்பதில்ைல. இந்த வேளையில் இப்படி தண்ணீர் வீணாகுகிறதே என மக்கள் அங்கலாய்த்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து குடிநீர் வீணாகி வருவதால் சாலை சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாகுவதை தடுக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story