வால்பாறையில் கல்வி தொலைக்காட்சி சேவை உள்ளதா மாணவர்களின் வீடுகளில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு


வால்பாறையில் கல்வி தொலைக்காட்சி சேவை உள்ளதா மாணவர்களின் வீடுகளில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 18 July 2021 11:42 PM IST (Updated: 18 July 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கல்வி தொலைக்காட்சி சேவை உள்ளதா என்பது குறித்து மாணவ-மாணவிகளின் வீடுகளில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.

வால்பாறை

வால்பாறையில் கல்வி தொலைக்காட்சி சேவை உள்ளதா என்பது குறித்து மாணவ-மாணவிகளின் வீடுகளில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார். 

கல்வி தொலைக்காட்சி சேவை 

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை. மாணவ-மாணவிகளின் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த தொலைக்காட்சியில் நேரம் வாரியாக ஒவ்வொரு வகுப்புகளுக்கும் பாடம் நடத்தப்பட்டு வருவதால், அது மாணவ-மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. 

முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு 

இதற்கிடையே இந்த தொலைக்காட்சியின் சேவை அனைத்து மாணவ- மாணவிகளின் வீடுகளில் இருக்கிறதா என்பதை கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் வால்பாறை சென்ற அவர், அங்குள்ள சோலையார் அணை, சேடல்டேம், வரட்டுப்பாறை, உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் சென்றார். 

பின்னர் அங்குள்ள மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கு நேரடியான சென்ற அவர், கேபிள் மூலம் கல்வி தொலைக்காட்சி சேவை கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

உடனடி நடவடிக்கை 

சில நேரத்தில் மட்டும் இந்த தொலைக்காட்சியின் சேவை கிடைப்பது இல்லை என்று சிலர் தெரிவித்தனர். அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த தொலைக்காட்சியின் சேவை மற்றும் செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். 

இந்த ஆய்வின்போது வால்பாறை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிவன்ராஜ், ராபின்சன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story