பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்


பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 July 2021 6:20 PM GMT (Updated: 18 July 2021 6:21 PM GMT)

பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட் செல்போன் வழங்கப்படவுள்ளது. ஸ்மார்ட் செல்போன் பெற விரும்பும் பார்வையற்ற நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு இளங்கலை கல்வி கற்பவர்கள், சுயதொழில் புரிபவர்கள் மற்றும் வேைல வாய்ப்பற்ற இளைஞர்களான பார்வையற்ற ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மத்திய- மாநில அரசு ஊழியராக இருக்கக்கூடாது. மேலே குறிப்பிட்ட தகுதிகள் கொண்ட பார்வையற்ற நபர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், படிப்பவராயின் கல்லூரியில் இருந்து படிப்பதற்காக பெறப்பட்ட சான்று, சுயதொழில் புரிபவர்கள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களாக இருப்பின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர்-621212 என்ற முகவரிக்கு வருகிற 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story