கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 18 July 2021 11:56 PM IST (Updated: 18 July 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தொடங்கி வைத்தார்.முகாமில் நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்கள் என 89 பேருக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி உதயவேலவன், மருத்துவர் பாலாஅபிராமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story