கண்ணாடிகள் ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்தது


கண்ணாடிகள் ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்தது
x
தினத்தந்தி 19 July 2021 12:20 AM IST (Updated: 19 July 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

கண்ணாடிகள் ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துகுள்ளானது

அரவக்குறிச்சி
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்தார். அந்தலாரி நேற்று அதிகாலை 1 மணியளவில் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி காமக்காபட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயங்கள் எதுவும் இல்லாமல்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story