கிராம காவல் அலுவலர் அறிமுக விழா
கிராம காவல் அலுவலர் அறிமுக விழாவில் பொதுமக்களுக்கு சேவை செய்யவே காவல்துறை உள்ளது என மாவட்ட சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கூறினார்.
கரூர்
அறிமுக விழா
கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸ் நிலையம் சார்பில் கிராம காவல் அலுவலர் அறிமுக விழா திருக்காம்புலியூரில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார்.
குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சீனிவாசன், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்காம்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் வரவேற்று பேசினார்.
1,800 கிராமங்கள்
தொடர்ந்து திருக்காம்புலியூர் கிராம காவல் அலுவலராக அருண் என்பவரை அறிமுகம் செய்து வைத்து போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,800 கிராமங்கள் உள்ளது. இருப்பினும் 60, 70 கிராமத்திற்கு ஒரு போலீஸ் நிலையம் தான் உள்ளது. கரூர் மாவட்டம் விவசாயத்தை சார்ந்தே உள்ளது. போலீசார் இன்னும் செல்லாத கிராமங்களும் இருக்கிறது. கிராமங்களை பொருத்தவரையில் மக்கள் போலீஸ் நிலையத்தில் கால் வைக்கவே கூடாது என்று சொல்வார்கள். குற்றவாளிகள் வந்து செல்லும் இடமாக போலீஸ் நிலையம் இருக்கக்கூடாது. மாறாக பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக மாற வேண்டும்.
உதவிகள் கேட்கலாம்
கிராமங்களை தேடி போலீஸ் வரவேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை ஓட்டுரிமை இல்லாத குடியிருப்பு வாசியாக பொதுமக்கள் பார்க்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்யவே காவல்துறை உள்ளது. உங்கள் கிராமத்திற்காக நியமிக்கப்பட்ட காவலர்களிடம் எந்த உதவியாக இருந்தாலும் கேட்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாயனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட 60 கிராமத்திற்கும் தலா ஒரு கிராம காவல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story