அரசு மருத்துவமனையில் லேப்டெக்னீசியன் போல் நடித்து பணம் பறித்த வாலிபர்
திருச்சி அரசு மருத்துவமனையில் லேப்டெக்னீசியன் போல் நடித்து பணம் பறித்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனையில் லேப்டெக்னீசியன் போல் நடித்து பணம் பறித்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
லேப்டெக்னீசியன்
திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவருக்கு உதவியாக அவரது உறவினரான ராஜூ என்பவர் உடன் இருந்தார். நேற்று காலை ராஜூவிடம் வந்த ஒரு நபர் தன்னை லேப்டெக்னீசியன் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் அந்த நோயாளிக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்வதற்காக பணம் கட்ட வேண்டும் என்று ராஜூவிடம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
நோயாளியிடம் பணம் பறிப்பு
விசாரணையில் அவர், கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவமனையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்து வந்துள்ளார்.
கொரோனா குணமான பிறகு, அவ்வப்போது நோயாளிகளின் உறவினர்களுடன் சாதுர்யமாக பேசி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து முறைப்படி புகார் ஏதும் வராததால் போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story