முசிறியில் பரபரப்பு: பணம் வைத்து சூதாடிய 23 பேர் கைது; கூக்ஸ் கிளப்புக்கு `சீல்’ வைப்பு
முசியில் கூக்ஸ் கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 23 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அந்த கிளப்புக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
முசிறி,
முசியில் கூக்ஸ் கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 23 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அந்த கிளப்புக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
கிளப்பில் சூதாட்டம்
முசிறியிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் தாலுகா அலுவலகம் அருகே உள்ள கூக்ஸ் கிளப் உள்ளது. இந்த கிளப்பில் விதிமுறைகளை மீறி வெளியூரிலிருந்து வரும் நபர்கள் பணம் வைத்து சூதாடுவதாக ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற பிரிவிற்கு முசிறி பகுதியில் இருந்து புகார் சென்றது.
அதன்பேரில், அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முசிறி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி மேற்பார்வையில் முசிறி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று இரவு கூக்ஸ் கிளப்பில் அதிரடி சோதனை நடத்தினர்.
23 பேர் கைது
அப்போது முசிறி, லால்குடி, கண்ணனூர், குளித்தலை, பழனி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த செந்தில்வேல்முருகன் (வயது 39), குமார் (43), நந்தகுமார் (45), மோகன் (57), ரவிச்சந்திரன் (75), ஞானமுத்து (47), ராஜா (43), சக்திவேல் (37), கோபி (43), பாலமுருகன் (33), மதிசெல்வன் (52), ஆதிஅய்யப்பன் (27), மகேஷ்குமார் (37), சதீஷ்குமார் (31), தர்மராஜ் (38), சக்திவேல் (52), சரவணன் (52), ராஜேந்திரன் (43), ரவி (38), சசிகுமார் (46), காந்தி (50), ஸ்ரீதர் (42), அருணன் (46) உள்ளிட்ட 23 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்களிடமிருந்து ரூ.76 ஆயிரத்து 690 பணம், சீட்டு கட்டுகள், 10 செல்போன், 6 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விதிமுறைகளை மீறி பணம் வைத்து சீட்டு விளையாடிய 23 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அந்த கூக்ஸ் கிளப்பிற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இச்சம்பவம் முசிறியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story