திருச்சியில் கஞ்சா விற்பனை: ரவுடி உள்பட 3 பேர் கைது; 3.45 கிலோ கஞ்சா பறிமுதல்


திருச்சியில் கஞ்சா விற்பனை: ரவுடி உள்பட 3 பேர் கைது; 3.45 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 19 July 2021 12:40 AM IST (Updated: 19 July 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி உள்பட 3 பேரை கைது செய்த போலீசார்,3.45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருச்சியில் கஞ்சா விற்பனை:
ரவுடி உள்பட 3 பேர் கைது
திருச்சி, ஜூலை.19-
திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கஞ்சா விற்பனை
திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள பொதுக்கழிவறை அருகே ஒரு நபர் பதுங்கி நின்று கஞ்சா விற்று கொண்டு இருந்தார். உடனே அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். 
விசாரணையில் அவர், அதேபகுதியை சேர்ந்த விஜய்பாபு (வயது 24) என்பதும், ரவுடியான இவர் மீது பல வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்பாபுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
இதேபோல் காந்திமார்க்கெட் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பேலஸ் தியேட்டர் அருகே கஞ்சா பதுக்கி வைத்து இருந்த மண்ணச்சநல்லூர் திருப்பைஞ்சீலியை சேர்ந்த குமாரை (49) காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் சேதுராப்பட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக திருச்சி கே.கே நகர் பகுதியை சேர்ந்த ரொனால்ட் லியோ (40) என்பவரை மணிகண்டம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story