குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை


குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 19 July 2021 12:46 AM IST (Updated: 19 July 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக விருதுநகரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

சாத்தூர், 
குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக விருதுநகரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். 
பூமி பூஜை 
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.444 கோடி மதிப்பீட்டில் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய மூன்று நகராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இதன் ஒரு பகுதியாக சாத்தூர் பழைய அரசு மருத்துவமனை முன்பு உள்ள எம்.ஏ.சி.எஸ். பூங்காவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். 
இந்தநிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ரகுராமன், அசோகன், சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், தி.மு.க நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன்,  காங்கிரஸ் நகர தலைவர் ஐயப்பன், ம.தி.மு.க. நகர செயலாளர் கணேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
புதிய இணைப்பு 
அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவுறும் நிலையில் சாத்தூர் நகராட்சிக்கு தற்போதைய குடிநீர் தவிர கூடுதலாக 26 லட்சம் லிட்டர் குடிநீர் கிைடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் 2050 மக்கள் தொகை கணக்கின் படி 41990 பேருக்கு 32.5 லட்சம் குடிநீர் வழங்கப்படும். மேலும் புதிதாக 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு 13,340 வீடுகளுக்கு குடிநீர் குழாய் புதிய இணைப்பு வழங்கப்படும்.  மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிக்கும் குடிநீர் திட்ட பணிகளை முறையாக செயல்படுத்தி குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். 
மருத்துவக்கல்லூரி 
தமிழகத்திலேயே உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அதிகப்படியான மனுக்கள் விருதுநகர் மாவட்டத்தில் தான் பெறப்பட்டு உள்ளன. மேலும் பெறப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். 
விருதுநகர் மருத்துவக்கல்லூரியின் கட்டிட பணிகளை விரைவுப்படுத்தி பணிகள் முடிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story