அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்
அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள குச்சூரணி கண்மாயில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப் படுவதாக வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சரவணன், குகன்பாறை கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, தலையாரி வெயில் முத்து ஆகியோர் ஊருணியில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரம், டிராக்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை ஏழாயிரம்பண்ணை போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story