மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேட்டை:
பேட்டை முனிசிபல் பஸ் நிறுத்தம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் முத்துக்குமார், காயல்மைதின், செய்யதலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ஹாருன் ரசீது கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் சாகுல் ஹமீது, தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் தமிழரசு, தமிழக கொங்கு பேரவை தென் மண்டல பொறுப்பாளர் செல்வம், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இக்பால் ஆகியோர் பேசினர். பகுதி செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story