அன்னவாசல் பகுதியில் குர்பானிக்காக குவிந்த ஆடுகள்
அன்னவாசல் பகுதியில் குர்பானிக்காக ஆடுகள் குவிந்தன.
அன்னவாசல்
முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் ஒன்றான பக்ரீத் தமிழகம் முழுவதும் வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. பண்டிகையின்போது முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவர். அன்றைய தினம் அவரவர் வீடுகளில் ஆடுகளை வெட்டி உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு குர்பானி கொடுப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகள் களை இழந்து காணப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதாலும், வழிபாட்டு தலங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாலும் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முஸ்லிம்கள் தயாராகி வருகின்றனர். பக்ரீத் பண்டிகையின் போது குர்பானி கொடுப்பதற்காக அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், காலாடிப்பட்டி, மாங்குடி, பெருமநாடு, புல்வயல், குடுமியான்மலை, வயலோகம் உள்ளிட்ட பகுதிகளில் செம்மறி ஆடுகள் குவிந்து வருகிறது.
Related Tags :
Next Story