குற்ற வழக்குகளில் தொடர்புடைய 104 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 104 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொலை, கொலைமுயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை ஒடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனிப்படை போலீசார், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் கொலைமுயற்சி வழக்குகளில் கைதாகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, குற்ற வழக்குகளில் தொடர்புடைய 104 பேரை ஒரே நாளில் கைது செய்தனர். தாழையூத்து, சேரன்மாதேவி, அம்பை உள்ளிட்ட உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 104 பேரில் 61 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story