கர்நாடகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
தென்மேற்கு பருவமழை தீவிரம்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர, மலைநாடு மற்றும் வட கர்நாடக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 3 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் சி.எஸ்.பட்டீல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இன்று முதல் 3 நாட்களுக்கு...
கடலோர மாவட்டங்களில், வட கர்நாடக உள்மாவட்டங்கள், தென்கர்நாடக உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உத்தர கன்னடா மாவட்டத்தில் 21 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
தாவணகெரேயில் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கண்ட இந்த பகுதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும். பெங்களூருவை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். அவ்வப்போது லேசமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு சி.எஸ்.பட்டீல் கூறினார்.
Related Tags :
Next Story