சேலம் மாவட்டத்தில் 142 பேருக்கு கொரோனா தொற்று


சேலம் மாவட்டத்தில் 142 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 19 July 2021 3:04 AM IST (Updated: 19 July 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
பாதிப்பு குறைந்து வருகிறது
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 163 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மாவட்டத்தில் 142 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 44 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். அதே போன்று காடையாம்பட்டியில் 3 பேர், மகுடஞ்சாவடி, ஓமலூர், வீரபாண்டியில் தலா 4 பேர், சங்ககிரி, சேலம் ஒன்றியம், மேச்சேரியில் தலா 5 பேருக்கு தொற்று இருப்பது தெரிந்தது.
2 பேர் பலி
அதே போன்று நங்கவள்ளியில் 6 பேர், தாரமங்கலம், எடப்பாடியில் தலா 7 பேர், தலைவாசலில் 9 பேர், ஆத்தூரில் 12 பேர் உள்பட நேற்று மொத்தம் 142 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 92 ஆயிரத்து 5 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுவரை 1,527 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Next Story