கோவில்பட்டியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2021 5:06 PM IST (Updated: 19 July 2021 5:06 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி மாதாகோவில் ரோட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், தலையில் விறகுக் கட்டைகளை சுமந்து, மத்திய அரசை கண்டித்து நகர குழு உறுப்பினர் ஜெயமங்கள வள்ளி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் பவுன் கிரேஸ், நகர பொருளாளர் பழனியம்மாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.7,500 வழங்கக் கோரியும், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியும், சமையல் கேஸ் விலை ரூ.1000ஐ தாண்டியும் விற்பனை செய்யப் படுவதை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத் தாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

Next Story