தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களின் மதிப்பெண் விவரம் வெளியீடு


தூத்துக்குடி மாவட்டத்தில்  பிளஸ்2 மாணவர்களின் மதிப்பெண் விவரம் வெளியீடு
x
தினத்தந்தி 19 July 2021 6:05 PM IST (Updated: 19 July 2021 6:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மட்டும் நடத்தப்பட்டன. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பில் இதர தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ்-2 இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மதிப்பெண்கள் விவரம் நேற்று வெளியிடப்பட்டன.
20 ஆயிரம் பேர்
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 53 மாணவர்கள், 10 ஆயிரத்து 999 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 52 பேர் பிளஸ்-2 படித்தனர். இதில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 777 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 336 பேரும், திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 939 பேரும் படித்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாணவ-மாணவிகளுக்கான மதிப்பெண் விவரங்கள் அந்தந்த பள்ளிகளுக்கும், மாணவ-மாணவிகளின் செல்போன் எண்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பள்ளிக்கூடங்களில் இந்த மதிப்பெண் விவரங்கள் அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்கப்பட்டன. இதனை சில மாணவர்கள் சென்று பார்வையிட்டனர்.


Next Story