ஓட்டல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓட்டல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பிரிவில் தமிழ்நாடு ஓட்டல் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் பழனியாண்டி தலைமை தாங்கினார். தேனி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஓட்டல் தொழிலாளர் நலவாரியத்தை அரசு செயல்படுத்தாததை கண்டிப்பது, குடியிருக்க வீடு கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேனி நகர செயலாளர் திருவாசகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story