கோவில்பட்டியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் பூல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு. தொழிற்சங்க கோட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட இணை செயலாளர் மாரியப்பன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகன், ஐக்கிய பொறியாளர்கள் சங்க கோட்ட செயலாளர் முத்து மாரியப்பன், பெடரேஷன் யூனியன் கோட்ட செயலாளர் ஷேக்மைதீன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story