திண்டுக்கல் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


திண்டுக்கல் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 19 July 2021 9:54 PM IST (Updated: 19 July 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் நாகல்நகர் சந்தைக்கு வெள்ளோடு, கொடைரோடு, நிலக்கோட்டை, நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, வடமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடுகள், கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை திண்டுக்கல் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்வார்கள். 


இந்தநிலையில் நாளை (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் நேற்று சந்தையில் குவிந்தனர். 

கடந்த வாரத்தில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்ட ஆடுகள், நேற்று அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை விலை போனது. ஆட்டின் எடைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

ஆடுகள் வழக்கத்தைவிட அதிக அளவில் விற்பனை ஆனதால் நேற்று ஒரே நாளில் ரூ.80 லட்சம் வரை விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்தது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 

Next Story