ஆயுள் தண்டனை கைதி உண்ணாவிரதம்
ஆயுள் தண்டனை கைதி உண்ணாவிரதம்
கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆயுள் தண்டனை கைதி உண்ணாவிரதம் இருந்தார்.
ஆயுள் தண்டனை கைதி
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. ஆசிரியர். இவர் கடந்த 1997-ம் ஆண்டு கோவை ஒப்பணக்கார வீதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோவை கோட்டைமேட் டை சேர்ந்த அபுதாகீர் (வயது 47) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அபுதாகீருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது. பின்னர் அபுதாகீர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் சிறையில் இருந்த அபுதாகீருக்கு பூச்சி கடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே அவரை சிறைத்துறை அதிகாரிகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உண்ணாவிரதம்
இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாததால் அபுதாகீர் பரோலில் விடுவிக்க அனுமதிகேட்டதாக தெரிகிறது. ஆனால் அவருக்கு பரோல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அவருக்கு நேற்று இரவு ஊழியர்கள் உணவு கொடுத்தனர். அவர் அதை சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறினார்.
மேலும் தன்னை பரோலில் விடுவிக்கும் வரை சாப்பிட மாட்டேன் என்று சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதன்படி அவர், நேற்று காலை மற்றும் மதியம் உணவு சாப்பிட வில்லை. கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட ஆயுள் தண்டனை கைதி உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story