பராமரிப்பு செலவுக்கு அரசு நிதி வழங்க கோரி கோமாவால் பாதிக்கப்பட்ட மகனுடன் பெண் தர்ணா போராட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


பராமரிப்பு செலவுக்கு அரசு நிதி வழங்க கோரி கோமாவால் பாதிக்கப்பட்ட மகனுடன் பெண் தர்ணா போராட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 19 July 2021 10:30 PM IST (Updated: 19 July 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு செலவுக்கு அரசு நிதி வழங்க கோரி கோமாவால் பாதிக்கப்பட்ட மகனுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி:
பராமரிப்பு செலவுக்கு அரசு நிதி வழங்க கோரி கோமாவால் பாதிக்கப்பட்ட மகனுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய சிறுவன் 
தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் ஹரி (16) கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு கோமாவிற்கு சென்று விட்டார். அவருக்கு குழாய் மூலம் உணவு செலுத்தப்படுகிறது. 
இந்த நிலையில், கோமாவில் உள்ள மகனுக்கு பராமரிப்பு செலவுக்கு அரசு நிதி வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் நீண்ட காலமாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
அதிகாரிகள் உறுதி 
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மஞ்சுளா, கோமாவில் உள்ள தனது மகனுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மஞ்சுளாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது, தாசில்தார் மூலம் இலவச வீட்டுமனைபட்டா வழங்க உடனே நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து மஞ்சுளா தனது மகனுடன் அங்கிருந்து சென்றார். கோமா நிலையில் உள்ள மகனுடன் பெண் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

Next Story