பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 348 மாணவர்கள் தேர்ச்சி
பிளஸ்2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 348 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
கிருஷ்ணகிரி:
பிளஸ்-2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 348 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
20,348 மாணவ-மாணவிகள்
கொரோனா தாக்கத்தால் பிளஸ்-2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 செய்முறை தேர்வு முடிவுகளை வைத்து, தேர்ச்சியும், மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 கல்வி மாவட்டங்களில் 82 தேர்வு மையங்களில் 192 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 493 மாணவிகளும், 9 ஆயிரத்து 855 மாணவர்களும் என மொத்தம் 20 ஆயிரத்து 348 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருந்தனர்.
மாவட்டம் முழுவதும் 104 அரசு பள்ளி, ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 87 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 192 பள்ளிகளில் இந்த தேர்வு நடை பெறுவதாக இருந்தது. இதில் அரசு பளளிகளில் 13 ஆயிரத்து 799 மாணவ, மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளியில் 200 மாணவ, மாணவிகளும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 6 ஆயிரத்து 349 மாணவ, மாணவிகளும் என்று மொத்தம் 20 ஆயிரத்து 348 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருந்தனர்.
அனைவரும் தேர்ச்சி
இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு, செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற விவரங்களையும், மதிப்பெண்களையும் இணையதளம் மூலமாகவும், பள்ளிக்கு நேரில் வந்தும் தெரிந்து கொண்டனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு வர முடியாத மாணவர்களுக்கும், செய்முறை தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்்கும் அவர்கள் விருப்பத்தின் பேரில் தனித்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story