வால்பாறையில் பழுதான பள்ளி கட்டிடங்களை பராமரிக்க வேண்டும்
வால்பாறையில் பழுதான பள்ளி கட்டிடங்களை உடனடியாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் பழுதான பள்ளி கட்டிடங்களை உடனடியாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பள்ளி கட்டிடங்கள்
வால்பாறை நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளது. வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் சேர்த்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வால்பாறை ஊராட்சி ஒன்றியமாக இருந்ததால் இந்த பள்ளிகள் ஊராட்சி ஒன்றியம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது அது நகராட்சியாக மாறிவிட்ட போதிலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முறையாக பள்ளி கட்டிடங்களை ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பராமரிப்பு கட்டாயம்
இருந்தபோதிலும் மாணவர்களின் நலன் கருதி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பள்ளிக்கட்டிடங்கள் பராமரிக்கப் பட்டது. ஆனால் தற்போது வால்பாறை பகுதியின் காலசூழ்நிலை காரணமாக பள்ளிக்கட்டிடங்களை பராமரிப்பு செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை பராமரிக்கக்கோரி நகராட்சி ஆணையாளரிடம் வட்டார கல்வி அதிகாரி வேண்டுகோள் விடுத்தார். பள்ளிக்கட்டிடங்கள் நகராட்சி யிடம் முறையாக ஒப்படைக்கவில்லை என்பதால் பள்ளியில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
உடனடி நடவடிக்கை
இது ஒருபுறம் இருக்க வட்டார கல்வி அதிகாரி அலுவலகம் பழுதாகி இருப்பதால் அங்கு ஆவணங்கள் எதுவும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பள்ளி, வட்டார கல்வி அதிகாரி அலுவலகத்தை யார் பராமரிப்பது நகராட்சியா அல்லது ஊராட்சி ஒன்றிய நிர்வாகமா என்ற கேள்வி எழுந்து உள்ளதால், 40 ஆண்டுகளாக எவ்வித பெரிய அளவிலான பராமரிப்பு பணிகள் செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, முறையாக நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி கட்டிடங்களை உடனடியாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story