விசைப்படகில் தவறி விழுந்த மீனவர் சாவு
விசைப்படகில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.
கோட்டைப்பட்டினம்:
ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்தவர் தேசிங்கு (வயது 40). இவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (49) மற்றும் 3 மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் 18 நாட்டிக்கலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென மாணிக்கம் தவறி படகில் உள்ள பலகை மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நெஞ்சில் அடிபட்டுள்ளது. பின்னர் அவர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே இதுகுறித்து மீனவர்கள் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு சங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சங்கத்தின் மூலமாக கடலோர காவல் குழுமம் மற்றும் மீன்வளத் துறையினர், ஆம்புலன்சுடன் கரையில் தயார் நிலையில் இருந்தனர். பின்னர் ஆம்புலன்சில் மீனவரை ஏற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story