சிறுமியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது
சிறுமியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது
வேலூர்
கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கலை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதையடுத்து அவர் வேலூரை அடுத்த கருகம்புத்தூரை சேர்ந்த ஞானசேகரன் என்பரை 2-வது திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் 13 வயது மகளை ஞானசேகரனின் அண்ணன் ஆட்டோ டிரைவரான லோகநாதன் (வயது 37) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாகியதாகவும், அதனை கலைக்க அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து டாக்டர் உடனடியாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அலுவலர்கள் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்தார். பின்னர் போக்சோ மற்றும் வன்கொடுமை சட்டத்தில் ஆட்டோ டிரைவர் லோகநாதன் கைது செய்யப்பட்டார். 13 வயது மகளை லோகநாதனுக்கு திருமணம் செய்து கொடுத்த தாயாரையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்டு அரியூரியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story