மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 20 July 2021 12:05 AM IST (Updated: 20 July 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.

வெள்ளியணை
பஞ்சப்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார் மகன் அபிமன்யு (வயது 20). அதே பகுதியில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து மகள் பிரதீபா (17). நேற்று இரவு அபிமன்யு தனது மோட்டார் சைக்கிளில் பிரதீபாவை ஏற்றிக்கொண்டு புலியூரில் இருந்து உப்பிடமங்கலம் வழியாக சுக்காம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கோயமுத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சை இடதுபுறமாக முந்தி செல்ல அபிமன்யு முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அபிமன்யூ பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பிரதீபா கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story