விராலிமலையில் இடப்பிரச்சினையில் இரு தரப்பினரிடைேய மோதல்; 2 பேர் கைது
இடப்பிரச்சினையில் இரு தரப்பினரிடைேய மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விராலிமலை:
விராலிமலை தாலுகா முல்லையூர் கிராமம் துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் பொன்னழகு மகன் ராஜ்குமார் (வயது 32). இவர், அக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பாண்டித்துரைக்கு சொந்தமான இடத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்சி ஆலம்பட்டி புதூரை சேர்ந்த ஜான் என்பவருக்கு கிரயம் பேசி முன் பணமாக ரூ.6 லட்சத்தை பாண்டிதுரையிடம் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை பாண்டித்துரை இடத்தை விற்பதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் மதியம் ராஜ்குமார் கொடுத்த முன்பணத்தை கேட்டு பாண்டித்துரையிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டித்துரை, அவரது நண்பரான பசுபதியுடன் விராலிமலையில் உள்ள ராஜ்குமாரின் அலுவலகத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதில் ராஜ்குமாருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டித்துரை, பசுபதி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story