வாராந்திர கவாத்து பயிற்சி
வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில், வாராந்திர கவாத்து பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைபெற்றது. அப்பயிற்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கு பயிற்சி பெறுவது மூலம் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான உணவு பொருட்கள் பற்றியும், காவல்துறையினரின் சந்ததிகளின் எதிர்கால நலன் பற்றியும் எடுத்துரைத்தார். பின்னர் அதிகாரிகள் முதல் போலீசார் வரை குறைநிறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்தார். இவ்வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், பொன்னமராவதி, இலுப்பூர் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய உட்கோட்டங்களில் நடைபெற்றன.
Related Tags :
Next Story