கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பு


கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 20 July 2021 1:09 AM IST (Updated: 20 July 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்தனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கார் ஷெட்டுக்குள் கட்டுவிரியன் பாம்பு இருப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலானதீயணைப்பு படையினர் பாம்பை பிடிக்க முயன்றபோது, அப் பாம்பு பணிமனையைஒட்டி இருந்த உறை கிணற்றுக்குள் விழுந்தது. பின்னர் அந்த பாம்பை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். 

Next Story