கொங்குநாடு விஷயத்தில் உடன்பாடு இல்லை; காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி
ஒன்றிய அரசு என்பது தேவையான பேச்சு என்றும், கொங்குநாடு விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
திண்டுக்கல்:
இந்து முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.பி.ராஜா வரவேற்றார். இதில் கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்ட செயலாளர் சஞ்சீவிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழகம் முழுவதும் 1¼ லட்சம் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். கொரோனா பரவலுக்கு ஏற்ப பொது நிகழ்ச்சிகள் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். கொரோனா குறித்து ஊராட்சி வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்த குழுக்கள் அமைத்துள்ளோம். தமிழகத்தில் நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாடுகளிடம் நிதிஉதவி பெற்று மிகப்பெரிய சதித்திட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். இதை உளவுத்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. அரசு மதசார்பற்ற முறையில் செயல்பட வேண்டும். தி.மு.க.வினர் ஒன்றிய அரசு என்று கூறிவருவது தேவையில்லாத ஒன்றாகும். அதேபோல் கொங்குநாடு விஷயத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழகம் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் ஓய்வுபெற்ற அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு கடந்த ஆட்சியில் கடுமையான நெருக்கடி இருந்தது. தற்போதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நெருக்கடி இருக்கும். இந்து கோவில் நிலங்களை மீட்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த நிலங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story