மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2021 1:28 AM IST (Updated: 20 July 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்மேளன நிர்வாகி பெருமாள்சாமி தலைமை தாங்கினார்.
தொ.மு.ச நிர்வாகி நடராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஐ.என்.டி.யு.சி. மண்டல செயலாளர் சார்லஸ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கருப்பசாமி, பொறியாளர் சங்க நிர்வாகிகள் இசக்கிபாண்டியன், சி.ஐ.டி.யு. வண்ணமுத்து, பீர் முகம்மதுஷா, ம.தி.மு.க. நிர்வாகி கிருஷ்ணன், பொறியாளர் கழக நிர்வாகி முருகன், பொறியாளர் யூனியன் நிர்வாகி ராமர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின்வாரியங்களை சிறு சிறு துண்டுகளாக்கி மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்க முயற்சி செய்வதையும், விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்காக வழிவகை செய்யும் மின்சார திருத்த சட்டம் 2021-ஐ திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமானவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story