மாநகராட்சி கோட்ட அலுவலகத்துக்குள் புகுந்த காளை


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 20 July 2021 1:34 AM IST (Updated: 20 July 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி கோட்ட அலுவலகத்துக்குள் காளை புகுந்தது.

திருச்சி
பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி கொடுப்பதற்காக ஆழ்வார்த்தோப்பு பகுதியில் காளை மாடு ஒன்று கட்டி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று பகல் அந்த காளை கயிற்றை அறுத்துக்கொண்டு திடீரென சாலையில் ஓடியதோடு பாலக்கரை ரவுண்டானா வழியாக ஓடிச்சென்று மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலக வளாகத்துக்குள் புகுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஊழியர்கள் அலுவலகத்துக்குள் ஒளிந்து கொண்டனர். பின்னர் அலுவலகத்தின் மெயின்கேட் மூடப்பட்டது. பின்னர் அந்த காளை அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் தேசியை கொடியை ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட மேடையை சுற்றி நடப்பட்ட இரும்பு கம்பிகள் ஆகியவற்றை முட்டி தள்ளியது. இதுகுறித்து ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வீரர்கள் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு அந்த காளையை மடக்கி பிடித்தனர்.

Next Story