படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடலுக்கு சென்ற தஞ்சை மீனவர்கள்
மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து படகுகளில் கருப்புக்கொடி கட்டி தஞ்சை மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
சேதுபாவாசத்திரம்;
மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து படகுகளில் கருப்புக்கொடி கட்டி தஞ்சை மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
மீன்வள மசோதா
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதா தங்களுடைய நலன்களுக்கு எதிராக இருப்பதாக மீனவர்கள் கூறுகிறார்கள்.
மசோதாவில், மீனவர்கள் இந்த வகையான மீன்களைத்தான் பிடிக்க வேண்டும். இந்த பகுதியில்தான் மீன்கள் பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட வலையை பயன்படுத்தித்தான் மீன் பிடிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் அரசிடம் உரிமங்கள் வாங்க வேண்டும். அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பன போன்ற விதிகள் பாரம்பரிய மீன்பிடி தொழிலை பாதிக்கும் விதத்தில் இருப்பதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
கருப்புக்கொடி
மத்திய அரசு மீன்வள மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது என்றும் மீனவர்கள் காரிக்கை விடுத்து உள்ளனர். இந்த நிலையில் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று தங்களுடைய விசைப்படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
Related Tags :
Next Story