குமரியில் 23 மையங்களில் 9,500 பேருக்கு தடுப்பூசி


குமரியில் 23 மையங்களில் 9,500 பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 20 July 2021 2:32 AM IST (Updated: 20 July 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நேற்று 23 மையங்களில் 9,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று 23 மையங்களில் 9,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 280 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஆனால் மருந்து தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது தடுப்பூசி முகாம்கள் தடைப்படுகிறது. 
மாவட்டத்தில் நேற்று 23 இடங்களில் முகாம்கள் நடந்தது. இதில் நாகர்கோவில் கவிமணி அரசு பள்ளி மற்றும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் வெளிநாடு செல்பவர்களுக்கான 2-வது டோஸ் போடப்பட்டது. டதி பெண்கள் பள்ளியில் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து முகாம்களிலும் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வாக்குவாதம்
நாகர்கோவிலை பொறுத்த வரையில் சால்வேசன் பள்ளி, இந்து கல்லூரி, கன்கார்டியா பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தன. இங்கு பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முன்னதாக தடுப்பூசிக்கான டோக்கன் கிடைக்காமல் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோட்டார் கவிமணி பள்ளியில் நடைபெற்ற வெளிநாடு செல்பவர்களுக்கான முகாமிலும் கூட்டம் அலைமோதியது. இங்கு 300 டோஸ் வழங்கப்பட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் டோக்கன் பெற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.ஆனால் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறாதவர்களும் கவிமணி பள்ளிக்கு வந்திருந்தனர். தங்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி மருத்துவ ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். எனினும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
மாற்றுத் திறனாளிகள்
இதே போல பரக்குன்று புனித ஜேம்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் 220 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், வெட்டுமணி ஆரம்ப சுகாதார நல அலுவலர் ஸ்ரீகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். நேற்று மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் 9,449 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

Next Story