மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் சாவு + "||" + Private company employee killed in vehicle collision

வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் சாவு

வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் சாவு
வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் இறந்தார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ்(வயது 55). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் விற்பனை ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பெரியம்மாபாளையம் நோக்கி சென்றபோது, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் பெரியம்மாபாளையம் பிரிவு அருகே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீசார் நடராஜின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நடராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலை கடித்து தி.மு.க.பிரமுகர் சாவு
சிதம்பரம் அருகே முதலை கடித்து தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
2. வாகனம் மோதி வாலிபர் பலி
தளவாய்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
3. மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் பலி
ராஜபாளையம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் வேன் ேமாதி பரிதாபமாக பலியானார்.
4. விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
5. விபத்தில் மூதாட்டி பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் மூதாட்டி பரிதாபமாக பலியானார்.