வடமாநில வாலிபரை தாக்கி செல்போன்- பணம் பறிப்பு


வடமாநில வாலிபரை தாக்கி செல்போன்- பணம் பறிப்பு
x
தினத்தந்தி 20 July 2021 2:56 AM IST (Updated: 20 July 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் மற்றும் பணம் மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

பெரம்பலூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீபிரதாம் ஹர்மாவின் மகன் ரோகித்குமார் (வயது 22). இவர் பெரம்பலூர் மாவட்டம் சொக்கநாதபுரம் நடுத்தெருவில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு, கூலி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் சத்திரமனை கிராமத்தில் வேலையை முடித்துக்கொண்டு ரோகித்குமார் மோட்டார் சைக்களில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கீழக்கணவாய் அருகே சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் ரோகித்குமாரின் மோட்டார் சைக்கிளை மறித்தனர். பின்னர் அவர்கள் ரோகித்குமாரை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1,700-ஐ பறித்து சென்றனர். இது தொடர்பாக ரோகித்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story