கர்நாடகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
கர்நாடகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
1,291 பேருக்கு பாதிப்பு
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 974 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்து 85 ஆயிரத்து 238 ஆக உயர்ந்து உள்ளது.
பெங்களூரு நகரில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தட்சிண கன்னடாவில் 126 பேர், மைசூரு, ஹாசனில் தலா 125 பேர், சிக்கமகளூருவில் 100 பேர் பாதிக்கப்பட்டனர். 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகி இருந்தது. கொப்பலில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை.
உயிரிழப்பு
வைரஸ் தொற்றுக்கு மேலும் 40 பேர் இறந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 197 ஆக உயர்ந்து உள்ளது. பெங்களூரு நகரில் 6 பேர், தட்சிண கன்னடா, ஹாசன், மைசூருவில் தலா 4 பேர், பெலகாவி, குடகில் தலா 3 பேர், பெங்களூரு புறநகர், கோலார், சிவமொக்கா, துமகூருவில் தலா 2 பேர், பாகல்கோட்டை, சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, ஹாவேரி, மண்டியா, உடுப்பி, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் இறந்தனர். 12 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
நேற்று 3 ஆயிரத்து 15 பேர் குணம் அடைந்த நிலையில், இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 21 ஆயிரத்து 491 ஆக உயர்ந்து உள்ளது. 27 ஆயிரத்து 527 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story