சேலம் மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 July 2021 4:04 AM IST (Updated: 20 July 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 136 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 136 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து தினமும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 142 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று புதிதாக 136 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்படி சேலம் மாநகராட்சி பகுதியில் 34 பேர், எடப்பாடி, காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், கொளத்தூர், வீரபாண்டியில் தலா 2 பேர், சங்ககிரி, நங்கவள்ளியில் தலா 3 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 4 பேர், தாரமங்கலத்தில் 5 பேர், மேச்சேரியில் 6 பேர், ஓமலூரில் 14 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலம் வந்த 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தம் 1,528 பேர் இறந்து உள்ளனர்.
இதுவரை 92 ஆயிரத்து 142 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 90 ஆயிரத்து 437 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story