நாகை மாவட்டத்தில் இன்று 38 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது - சுகாதாரத்துறை அறிவிப்பு


நாகை மாவட்டத்தில் இன்று 38 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது - சுகாதாரத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 20 July 2021 11:47 AM IST (Updated: 20 July 2021 11:47 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் இன்று 38 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்விவரம் வருமாறு:-

கருவேலங்கடை பஞ்சாயத்து அலுவலகம், மேல செட்டி சேரி சமுதாயக் கூடம், வடுகச்சேரி, கோட்டூர், வடகுடி, மாதானம், கலசம்பாடி, மூங்கில்குடி, அகலாங்கன், வடுகச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், வடலூர் ஆரம்ப சுகாதார நிலையம், தேமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், தேவூர் ஆரம்ப சுகாதார நிலையம், வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையம், நீடூர் ஆரம்ப சுகாதார நிலையம், தாதன்திருவாசல், சன்னாநல்லூர் தொடக்கப்பள்ளி, வேதாரண்யம் கிராம சுகாதார நிலையம், நாகை மருந்துகொத்தளத்தெரு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இதுதவிர கர்ப்பிணிகளுக்கு வேளாங்கண்ணி, கரியாப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், கோடியக்கரை, தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையம், நீர்மூலை ஆரம்ப சுகாதார நிலையம், நாலுவேதபதி, திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையம், திருக்கண்ணபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பயத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையம், கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், ஏனங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 14 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

அதேபோல நாகை அரசு மருத்துவமனை, நாகூர் அரசு மருத்துவமனை, வேதாரண்யம் அரசு மருத்துவமனை, கருப்பம்புலம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்கள் உள்படமாவட்டத்தில் மொத்தம் 38 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story