வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை மீட்டு தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை மீட்டு தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2021 4:28 PM IST (Updated: 20 July 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் படப்பை அருகே மாகாண்யம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியை சேர்ந்த அழகூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் அனைத்து தேவைகளுக்கும் படைப்பை நகரையே சார்ந்து உள்ள சூழ்நிலையில் போதிய சாலை வசதிகள் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. எனவே சாலையை சீரமைக்க வனத்துறை அனுமதி பெற வேண்டி உள்ளது. எனவே சாலை அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ள இயலவில்லை.

இதனால் 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள படைப்பை நகருக்கு செல்ல 4 கிலோ மீட்டர்தூரம் பொதுமக்கள் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை மீட்டு, நிரந்தர தார்ச்சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்து 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தியிடம் மனு அளித்தனர்.

Next Story