மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் குழாய் இணைத்து தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள் + "||" + puplic water connection illigal usage

பிளாஸ்டிக் குழாய் இணைத்து தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள்

பிளாஸ்டிக் குழாய் இணைத்து தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள்
பிளாஸ்டிக் குழாய் இணைத்து தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள்
அவினாசி
அவினாசி பேரூராட்சியில் உள்ள தெரு குழாய்களில் பிளாஸ்டிக் குழாய் இணைத்து தண்ணீர் பிடிப்பதற்கு பேரூராட்சி நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
அவினாசி பேரூராட்சியில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் குழாய் இணைப்பு வழங்கி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம்  செய்யப்படுகிறது. இது குடும்பத்தினருக்கு 5, அல்லது 6 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. பொது குழாய்களில் குடங்களை வரிசையில் வைத்துதான் தண்ணீர் பிடிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் பொது குழாய்களில் பிளாஸ்டிக்குழாய்  இணைத்து தங்களது வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கு தேவைக்கு அதிகமாக 3 மணி நேரம் தண்ணீர் பிடித்து அதை வீணடிக்கின்றனர். சில வீடுகளில் தெருக்குழாய்களில் பிளாஸ்டிக்குழாய் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் உடந்தையா என்ற சந்தேகம் எழுகிறது. அடுத்தவர்கள் தங்கள் தேவைக்கு தண்ணீர் பிடிக்க சென்றால் விடுவதில்லை. அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். 
எனவே பொதுக்குழாய்களில் யாரும் பிளாஸ்டிக்குழாய்  இணைத்து தண்ணீர் பிடிக்கக்கூடாது. குடத்தில்தான் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்பதை நிரந்தரமாக நடைமுறைபடுத்துவதுடன், இதை மீறி பிளாஸ்டிக்குழாய் இணைத்து  தண்ணீர்பிடிப்பவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகத்தினர் சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
---