அரசு ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு
தமிழில் சிறந்த குறிப்புகள் எழுதிய அரசு ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.
தேனி:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். அதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரொக்கப்பரிசை கலெக்டர் முரளிதரன் வழங்கி பாராட்டினார்.
அதன்படி, மாவட்ட நிலை வகைப்பாட்டின் கீழ் தமிழில் சிறந்த குறிப்புகள் மற்றும் வரைவுகள் எழுதியதற்காக மாவட்ட திட்ட அலுவலக உதவியாளர் புருசோத்தமன் முதல் பரிசும், தேனி வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் அலுவலக உதவியாளர் திருமால் 2-வது பரிசும் பெற்றனர்.
தன்னாட்சி நிலை வகைப்பாட்டின் கீழ் தேனி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றும் நிர்வாக உதவியாளர்கள் ஜமுனா முதல் பரிசும், ராஜேஸ்வரி 2-வது பரிசும் பெற்றனர்.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story