60 அடி உயர தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி மயக்கம்


60 அடி உயர தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி மயக்கம்
x
தினத்தந்தி 20 July 2021 6:24 PM IST (Updated: 20 July 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறிய ெதாழிலாளி மயக்கமடைந்தார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறிய ெதாழிலாளி மயக்கமடைந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த புதுப்பேட்டை அருகே அக்ராகரம் நாட்டான்வட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில் தென்னை மரங்களை அபிமன்னன் என்பவர் குத்தகைக்கு எடுத்து உள்ளார். 

இன்று காலை தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறிக்க புதுப்பேட்டை அருகே அத்தியூர் பகுதியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி ராமன் (வயது 65) என்பவரை அழைத்து வந்தனர். 

அவர் 4 மரங்களில் தேங்காய் பறித்து விட்டு 60 அடி உயரமுள்ள 5-வது தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க காலில் அணியும் மெட்டு மற்றும் இடுப்புக்கு பெல்ட் அணிந்து கொண்டு  மரத்தில் ஏறினார். 60 அடி உயரத்தில் ஏறும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டு அதே மரத்தில் மயங்கிய நிலையில் தொங்கினார். 

சுமார் 1 மணி நேரம் தென்னை மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதுகுறித்து அபிமன்னன் மற்றும் பொதுமக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) மணிகண்டன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ½ மணி நேரம் போராடி ராமனை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக புதுப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Next Story