ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர் பணியிடை நீக்கம்
தேசூரில் ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
தேசூரில் ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பேரூராட்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 15-ந் தேதி நெல் விற்ற பணம் முறையாக வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் துறை ரீதியாகவும், போலீசார் மூலமாகவும் விசாரிக்க உத்தரவிட்டார்.
இதில் நெல் கொள்முதல் செய்து பணம் வழங்காமல் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் நெல் விற்ற விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா கொடுக்காத தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளரான பெ.ரோகேஷ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து செய்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் மு.வள்ளலார் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story