தண்ணீர் திறக்க வேண்டும்
பி.ஏ.பி. 4-ம் மண்டல பாசனத்திற்கு அடுத்த மாதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்லடம்
பி.ஏ.பி. 4-ம் மண்டல பாசனத்திற்கு அடுத்த மாதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகள் குழு கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு கூட்டம் பல்லடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை தாங்கினார். வை.பழனிசாமி, ஏ.பாலதண்டபாணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆர்.குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
டெல்லியில் கடந்த 7 மாத காலமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளை ஆதரித்து போராட்டத்தில் பங்கேற்க தமிழக விவசாயிகள் அடுத்த மாதம்ஆகஸ்டு 3ந் தேதி சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச்செல்கிறார்கள். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கணிசமான விவசாயிகள் கலந்துகொள்வது.
மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும். சமீபத்தில் தரமில்லாத போலியான வெங்காய விதையை வாங்கி விதைத்து பயிர் செய்த விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில்பி.ஏ.பி. தற்போது உரிய நீர்வரத்து உள்ள காரணத்தால் ஆகஸ்டு மாதம் இறுதியில் 4ம் மண்டல பாசனத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். அதற்கு முன்பாகவே அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும்.
ஜம்புக்கல் மலை
வேளாண்மை துறை மூலமாக மானாவாரி பயிர்களுக்கு மானியத்தில் வழங்கப்படும் தானியம் மற்றும் சோள வகை விதைகள் ஐப்பசி, புரட்டாசி மாதங்களில் தாமதமாக வழங்கப்படுவதால், ஆடிப்பட்ட விதைப்புக்கு பயன்படுவதில்லை. ஆகவே விதைப்பயிர்களை பருவத்தில் பயிர் செய்யும் வகையில் முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜம்புக்கல் மலை அழிக்கப்படுவதை தடுத்து, இயற்கை வளத்தையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராஜகோபால், எஸ்.வெங்கடாசலம், எஸ்.கே.குழந்தைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story