தூத்துக்குடி அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு

தூத்துக்குடி அருகே விபத்தில் காயமடைந்தவர் இறந்து போனார்
தூத்துக்குடி அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு
Published on

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணி நகரைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 55). இவர் கடந்த 16-ம் தேதி நேசமணி நகர் பகுதியில் இருந்து தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையை சைக்கிளில் கடந்து சென்றபோது திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார் மோதியதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com