2 கைதிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சேலம் ஜெயில் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு- வக்கீல் மீது போலீசார் வழக்கு
2 கைதிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சேலம் ஜெயில் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக வக்கீல் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் சிறையில் 2 ரவுடிகளை கொலை செய்ய விஷம் கொடுக்கப்பட்டு,, அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இதுதொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த வக்கீல் ஒருவர் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை அறிந்த சேலம் சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சேலம் ஜெயில் வார்டன் மதிவாணன், சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரில், சேலம் ஜெயில் குறித்து திருச்சியை சேர்ந்த வக்கீல் ஒருவர் அவதூறு பரப்பி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் அந்த வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story